கொட்டுக்காளி படத்தின் ஓடிடி தேதி வெளியானது| Kottukkaali movie OTT date released

  மாலை மலர்
கொட்டுக்காளி படத்தின் ஓடிடி தேதி வெளியானது| Kottukkaali movie OTT date released

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் இசை இல்லாதது படத்திற்கு கூடுதல் சிறப்பம்சம். தன் வீட்டுப் பெண் வேறு ஒருவனை காதலித்ததால் அவரை ஊர் சாமியாரிடம் அழைத்து சென்றால் சரி ஆகிவிடும் என குடும்பத்துடன் கிழம்புகின்றனர். இந்த பயணமே திரைப்படத்தின் கதைக்களமாகும்.படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.திரையரங்கில் இப்படத்தை பார்க்க தவறவிட்டவர்கள். ஓடிடி-யில் பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை